இந்தியா

சிபிஐ இயக்குநராக பிரவீன் சூட் நியமனம்!

DIN

புதுதில்லி: சிபிஐ இயக்குநராக ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் சூட் நியமனம் செய்து மத்திய பணியாளர் பயிற்சித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.  

மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ இயக்குநர் சுபோத்குமாரின் பதவிக்காலம் வரும் 25 ஆம் தேதியுடன் முடிவடைய இருப்பதால், புதிய இயக்குநர் குறித்து பிரதமர், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உச்ச நீதின்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு  3 பேரின் பெயரை அடுத்த சிபிஐ இயக்குநர் பதவிக்கு பரிந்துரை செய்திருந்தது. 

அதன்படி, கர்நாடக டிஜிபி ஆக இருந்த பிரவீன் சூட் சிபிஐ இயக்குநராக நியமித்து மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு (மே 2025) வரை அவர் அந்த பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1986 ஆம் ஆண்டு கர்நாடக பேட்ச் பிரிவைச் சேர்ந்த பிரவீன் சூட், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கர்நாடக டிஜிபியாக நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டு மே மாதம் அவரது பணிக்காலம் முடிந்து, ஓய்வு பெற உள்ள நிலையில், சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். 

2024 ஆம் ஆண்டு மே மாதத்துடன் பிரவீன் சூட் ஓய்வுபெற இருந்தாலும் சிபிஐ இயக்குநராக 2025 ஆம் ஆண்டு மே மாதம் வரை தொடர்வார் என மத்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கர்நாடகத்தில் ஆளும் பாஜகவுக்கு ஆதரவாக பிரவீன் சூட் செயல்படுவதாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் குற்றஞ்சாட்டு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கர்நாடக பேரவைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் நேரத்தில் சிபிஐ இயக்குநராக பிரவீன் சூட் நியமிக்கப்பட்டு இருப்பது கூடுதல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT