கோப்புப்படம் 
இந்தியா

திருமலையில் சுவாமி தரிசனம் செய்துவிட்டுத் திரும்பும்போது நேர்ந்த சோகம்: 6 பேர் பலி

ஆந்திரப் பிரதேசத்தின், கடப்பா மாவட்டத்தில் திருமலை கோயிலுக்குச் சென்று திரும்பும்போது ஏற்பட்ட சாலை விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

DIN

ஆந்திரப் பிரதேசத்தின், கடப்பா மாவட்டத்தில் திருமலை கோயிலுக்குச் சென்று திரும்பும்போது ஏற்பட்ட சாலை விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

பென்சியாநத்தபுரம் கிராமத்தில் திருப்பதி கோயிலுக்குச் சென்றுவிட்டு 12 பேர் கொண்ட குழு காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது இரும்பு தாது ஏற்றிச் சென்ற லாரி மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்து அதிகாலை காலை 5.30 மணியளவில் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் நடைபெற்றதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். 

திருப்பதியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஏழுமலையான் சுவாமி கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு, தாடிபத்ரி நோக்கி இந்தக் குழு திரும்பிக்கொண்டிருந்தனர்.

காயமடைந்தவர்கள் அனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும், இறந்தவர்களின் பெயர்கள் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அவர் தெரிவித்தார். 

இதுகுறித்து விபத்து நடந்த இடத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

டாஸ்மாக் பணியாளா் பிரச்னைக்கு தீா்வு காண முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

நாகையில் பாய்மரப் படகு பயிற்சி மையம்: உதயநிதி தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT