இந்தியா

வாட்ஸ் ஆப்பில் சேட் லாக் வசதி அறிமுகம்

பயனர்கள் மிகவும் நெருக்கமான உரையாடல்களை பாதுகாக்க சேட் லாக் வசதியை வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தியுள்ளது.

DIN

பயனர்கள் மிகவும் நெருக்கமான உரையாடல்களை பாதுகாக்க சேட் லாக் வசதியை வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த வசதியின் மூலம் பயனர்கள் தங்கள் தனிப்பட்ட அல்லது குழுக்களில் முக்கிய உரையாடல்களை லாக் செய்யலாம். லாக் பட்டியலில் தனிப்பட்ட நபர் மற்றும் குழக்களை சேர்க்கலாம். இவ்வாறு சேட் லாக் பட்டியலில் சேர்த்தபின் அதற்கான ஸ்கிரினில் மட்டுமே உரையாட முடியும்.

பயனர்கள் தங்கள் செல்போனின் கடவுச்சொல் அல்லது கைரேகை போன்ற பயோமெட்ரிக் மூலம் இந்த உரையாடலை திறக்க முடியும். லாக் சேட்டில் புகைப்படம் மற்றும் விடியோக்கள் சேர்க்கப்பட்டு உள்ளதால், தானாக கேலரியில் சேமிக்கப்படாது.

இந்த வசதியை பெற வாட்ஸ் ஆப்பில் தனிப்பட்ட நபரின் ப்ரொஃபைல் பகுதிக்கு சென்று சேட் லாக்(char lock) என்பதை கிளிக் செய்ய வேண்டும். கைரேகை பதிவு மூலம் சேட் லாக் வசதியை பெற்று கொள்ளலாம்.

வாட்ஸ் ஆப் வரும் மாதங்களில் சேட் லாக்குக்கான கூடுதல் விருப்பங்களைச் சேர்க்கப் போவதாக அறிவித்துள்ளது. அதன்படி, தனிப்பட்ட பயனர்களுக்கு  தனித்தனியான கடவுச்சொல்லை வைத்துக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 போ் கைது

நவராத்திரியில் உச்சம் தொட்ட வாகன, வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை!

இந்தோனேசிய பள்ளி கட்டட விபத்து: உயிரிழப்பு 14-ஆக உயா்வு

பிரிட்டன் யூத ஆலயத் தாக்குதல்: 6 பேரிடம் விசாரணை

SCROLL FOR NEXT