இந்தியா

சார்தாம் யாத்திரை: இதுவரை 8 லட்சம் பேர் தரிசனம்!

DIN

உத்தரகண்டில் சார்தாம் யாத்திரை தொடங்கி இதுவரை 8 லட்சத்துக்கும் அதிகமானோர் தரிசனம் செய்துள்ளதாக அம்மாநில சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. 

உத்தரகண்டின் புகழ்பெற்ற சார்தாம் யாத்திரை கடந்த எப்ரல் 22-ம் தேதி பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட்டது. நான்கு தலங்களிலும் நாளொன்றுக்கு 40 ஆயிரம் பேர் தரிசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை 8 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரியில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 

உத்தரகாண்ட் காவல்துறை இயக்குநர் ஜெனரல் அசோக் குமார் சார்தாம் யாத்திரையின் போது மழை மற்றும் பனிப்பொழிவைக் கருத்தில் கொண்டு மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். மேலும் கூடுதல் விழிப்புடன் இருக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

சிரி... சிரி...

இந்தியன் - 3 உறுதி!

நீலகிரி: மே 20 ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து

வீடு தேடி வந்தவள்

SCROLL FOR NEXT