இந்தியா

கர்நாடக மக்களின் நலனே எங்கள் முன்னுரிமை: டி.கே.சிவகுமார் ட்வீட்!

கர்நாடக மக்களின் நலனுக்காக நாங்கள் ஒன்றுபட்டுள்ளதாக கர்நாடக துணை முதல்வராக பதவியேற்க உள்ள டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். 

DIN

கர்நாடக மக்களின் நலனுக்காக நாங்கள் ஒன்றுபட்டுள்ளதாக கர்நாடக துணை முதல்வராக பதவியேற்க உள்ள டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். 

கா்நாடக பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றதையடுத்து, மாநில முதல்வர் பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவகுமாா் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இதுகுறித்து காங்கிரஸ் தலைமை, கடந்த ஓரிரு தினங்களாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்த நிலையில் சுமூக முடிவு ஏற்பட்டுள்ளது. 

கா்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் சனிக்கிழமை (மே 20) பிற்பகல் 12.30 மணியளவில் பெங்களுரூவில் பதவியேற்பு விழா நடைபெறும் என்றும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். 

இந்நிலையில் இதுகுறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் துணை முதல்வராக பதவியேற்க உள்ளவருமான டி.கே.சிவகுமார், 'கர்நாடகத்தின் பாதுகாப்பான எதிர்காலம் மற்றும் மக்களின் நலனே எங்களின் முதன்மையான முன்னுரிமை, அதற்கு உத்தரவாதம் அளிப்பதில் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம்' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT