இந்தியா

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகின!

2022 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 

DIN

2022 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் இறுதித் தேர்வு முடிவுகள் இன்று(செவ்வாய்கிழமை) வெளியாகியுள்ளன. 

நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பணியிடங்களுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை நடத்தி வருகிறது. 

ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இத்தேர்வு முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகளைக் கொண்டது. 

இந்நிலையில் 933 காலி பணியிடங்களுக்கான 2022 ஆம் ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஜூன் மாதத்திலும் முதன்மைத் தேர்வு கடந்த செப்டம்பர் மாதத்திலும் நடைபெற்ற நிலையில் இறுதித் தேர்வான நேர்முகத் தேர்வு ஜனவரி-மே மாதங்களில் நடைபெற்றது. 

இந்நிலையில் தேர்வின் இறுதி முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. https://upsc.gov.in/ என்ற யுபிஎஸ்சி-யின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தேர்வு முடிவுகளைக் காணலாம். 

இதில் முதல் 4 இடங்களை பெண்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் முதல் 10 இடங்களில் 6 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT