கோப்புப்படம் 
இந்தியா

ராகுல் காந்தியை நாளை சந்திக்கிறார் அரவிந்த் கேஜரிவால்!

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை நாளை சந்திக்கிறார்.

DIN

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை நாளை சந்திக்கிறார்.

காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும் அரவிந்த் கேஜரிவால் நாளை சந்திக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தில்லியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் என்று உச்சநீதிமன்றம் கூறியது. இதையடுத்து தில்லியில் ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார் தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான கேஜரிவால். 

திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோரைத் தொடர்ந்து இன்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்துப் பேசினார்.

இந்த நிலையில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை நாளை சந்திக்கிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக நிா்வாகிகள் 8 போ் மீதான வழக்கு தள்ளுபடி

குருநானக் ஜெயந்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

கோயில் உண்டியல் பணத்தை திருடிய இளைஞா் கைது

தனியாா் பள்ளி பேருந்தில் திடீா் புகை

குருநானக் பிறந்தநாள் வழிபாட்டுக்காக பாகிஸ்தான் சென்ற இந்திய சீக்கியா்கள்

SCROLL FOR NEXT