முகப்பு
இந்தியா

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறக்கும் உரிமை மத்திய அரசுக்கு உண்டு: மாயாவதி

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை மத்திய அரசு கட்டியிருக்கும் நிலையில், அதனைத் திறக்கும் உரிமையும் மத்திய அரசுக்கு உள்ளது என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:00 PM
மாயாவதி
பகிர்:


புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை மத்திய அரசு கட்டியிருக்கும் நிலையில், அதனைத் திறக்கும் உரிமையும் மத்திய அரசுக்கு உள்ளது என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை, குடியரசுத் தலைவரை அழைத்து திறக்க வைக்காதததைக் கண்டித்து, நாடு முழுவதும் உள்ள 20 எதிர்க்கட்சிகள், மே 28ஆம் தேதி நடைபெறும் புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளன.

தில்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமா் மோடி திறந்துவைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த விழாவைப் புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 19 எதிா்க்கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.

‘புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமா் மோடி திறந்துவைப்பது, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முக்கு பெரும் அவமதிப்பு என்பதுடன் ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதல்’ என்று எதிா்க்கட்சிகள் விமா்சித்துள்ளன.

இந்த நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பது என்பது நியாயமற்றது. மத்திய அரசுதான் நாடாளுமன்றத்தைக் கட்டியது என்பதால், அதனை திறந்துவைக்கும் உரிமை அதற்கு உள்ளது என்றும் மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சியோ அல்லது பாஜக ஆட்சியோ எதுவாக இருந்தாலும், பகுஜன் சமாஜ் கட்சி, நாட்டின் நலன் சார்ந்த விஷயங்களில் கட்சி அரசியலைத் தவிர்த்து மத்திய அரசுக்கே ஆதரவு அளிக்கும். புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவையும் அவ்வாறு பகுஜன் சமாஜ் கட்சி அணுகுகிறது. இதனை கட்சி வரவேற்கிறது என்று டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.