இந்தியா

பாரம்பரியம், கலாசாரத்தை காங்கிரஸ் ஏன் இந்த அளவுக்கு வெறுக்கிறது? அமித் ஷா

இந்திய பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் காங்கிரஸ் கட்சி ஏன் இந்த அளவுக்கு வெறுக்கிறது? என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி எழுப்பியிருக்கிறார்.

DIN


இந்திய பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் காங்கிரஸ் கட்சி ஏன் இந்த அளவுக்கு வெறுக்கிறது? என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி எழுப்பியிருக்கிறார்.

நாடு சுதந்திரம் அடைந்தபோது செங்கோல் மூலம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததாகக் கூறப்படுவது உண்மைக்குப் புறம்பானது என்று காங்கிரஸ் கூறியிருந்தது குறித்து பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் அவ்வாறு கூறுவதன் மூலம் திருவாவடுதுறை ஆதீனத்தின் வரலாற்றை நிராகரிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

தனது டிவிட்டர் பக்கத்தில் அமித் ஷா இது தொடர்பாக பதிவிட்டிருப்பதாவது, இந்தியா சுதந்திரம் பெற்றதைக் குறிக்கும் வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த புனிதமான சைவ மடம் சார்பில் நேருவுக்கு செங்கோல் வழங்கப்பட்டது. ஆனால், அதனை ஒரு வாக்கிங் ஸ்டிக் என்று அருங்காட்சியகத்துக்கு காங்கிரஸ் கொடுத்துவிட்டது என்றும் கடுமையாக விமரிசித்துள்ளார்.

மேலும், காங்கிரஸ் கட்சி தனது செயல்பாடு குறித்து சிந்திக்க வேண்டும். நாட்டின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் காங்கிரஸ் கட்சி ஏன் இந்த அளவுக்கு வெறுக்கிறது? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT