முகப்பு
இந்தியா

அஸ்ஸாமில் சரக்கு வாகனம் மீது கார் மோதியதில் 7 மாணவர்கள் பலி, 6 பேர் காயம்

அஸ்ஸாமின் கௌகாத்தியில் உள்ள ஜலுக்பாரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் ஏழு மாணவர்கள் பலியாகினர், 6 பேர் காயமடைந்தனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:00 PM
பகிர்:

கௌகாத்தி (அஸ்ஸாம்): அஸ்ஸாமின் கௌகாத்தியில் உள்ள ஜலுக்பாரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் ஏழு மாணவர்கள் பலியாகினர், 6 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அஸ்ஸாமின் அசாரா பகுதியில் இருந்து வேகமாக வந்த கார் டிவைடரைக் கடந்து எதிரே வந்த சரக்கு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இதில், காரில் இருந்த 7 பேர் பலியாகினர். சரக்கு வாகனத்தில் இருந்த 3 பேர் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.

விபத்தில் பலியானவர்கள் அனைவரும் அஸ்ஸாம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் என்றும், காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.