மத்திய அரசின் பெரும்பாலான தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படுகின்றன. இதனால் இந்தி அல்லாத மொழியை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கும், இந்தியை தாய்மொழியாக கொண்ட மாணவர்களுக்கும் இடையே சமநிலையற்ற போட்டி ஏற்படுகிறது.
இந்தியில் தேர்வு நடத்தப்படுவதால் வட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் தேர்ந்தெடுக்கப்படுவதாக தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் மத்திய அரசைக் கண்டித்து வருகிறார்கள்.
இதையும் படிக்க: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது: கபில் சிபல் விமர்சனம்!
இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது, “மாணவர்களுக்கு அவர்களுக்கு தெரிந்த மொழிகளில் தேர்வு வைக்க வேண்டும். அனைவருக்கும் பொதுவானதாக தேர்வு விதிமுறைகள் அமைய வேண்டும்.
வேலைகளுக்கான போட்டித் தேர்வை இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டும் தேர்வு நடத்தும் மத்திய அரசின் முடிவை நாங்கள் எதிர்க்கிறோம். இந்தியில் தேர்வு நடத்துவது போல, அந்தந்த மாநில மொழிகளில் தேர்வு நடத்தப்பட வேண்டும். இதுகுறித்து மறுபரிசீலனை செய்யக் கோரி மீண்டும் பிரதமருக்கு கடிதம் எழுதவுள்ளேன்” என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.