இந்தியா

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஸ்கூட்டர் பரிசு!

12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஸ்கூட்டர் பரிசாக தரவுள்ளதாக அறிவித்துள்ளது அஸ்ஸாம் மாநில அரசு.

DIN

டாக்டர் பனிகாந்தா ககாதி விருது திட்டத்தின் கீழ் அஸ்ஸாமிய அரசு அந்த மாநிலத்தில் 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்ணோடு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஸ்கூட்டர் இலவசமாக வழங்கவுள்ளது.

அதன்படி, 35,775 மாணவ மாணவியருக்கு நவம்பர் 30 அன்று ஸ்கூட்டர் வழங்கப்படவுள்ளது.

75 சதவீதத்திற்கு அதிகமான மதிப்பெண் பெற்ற 5,566 மாணவர்களுக்கும் 60 சதவீதத்திற்கு அதிகமான மதிப்பெண் பெற்ற 30,209 மாணவியருக்கும் இந்த விருது வழங்கப்படவுள்ளது.

அஸ்ஸாமிய சுற்றுலா துறை அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா பேசும் போது, “மாநில அரசு 35,775 அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஸ்கூட்டர் வழங்கவுள்ளது. இந்த விழா நவ. 30-ல் நடக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், உயர் கல்வியில் (10-ம் வகுப்பு) 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற 27,183 மாணவர்களுக்கு ரூபாய்.15,000 நவம்பர் 29-ம் தேதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சட்டப் பேரவையில் பூடான் அரசுக்கு மேலும் மூன்று எம்.பி.பி.எஸ் இடங்கள் அளிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT