இந்தியா

கேஜரிவால் பதவி விலகக்கோரி ராஜ்காட்டில் பாஜக தலைவர்கள் போராட்டம்!

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பதவி விலகக்கோரி தில்லியில் பாஜக தலைவர்கள் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடம் அருகே போராட்டம் நடத்தினர். 

DIN

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பதவி விலகக்கோரி தில்லியில் பாஜக தலைவர்கள் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடம் அருகே போராட்டம் நடத்தினர். 

தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் துணை முதல்வர் மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் உள்ளிட்டோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, கலால் கொள்கை ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகக் கோரி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு அமலாக்கத் துறை திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் தில்லி முதல்வர் கேஜரிவால் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதால், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதனைக் கண்டித்து எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஹர்ஷவர்தன், எம்பி மனோஜ்குமார் திவாரி, தில்லி எதிர்க்கட்சித் தலைவர் ராம்வீர் சிங் பிதுரி உள்ளிட்ட பாஜகவின் முக்கிய தலைவர்கள் தர்ணா போராட்டத்தில் கலந்துகொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உளுந்து, பச்சைப் பயறுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயம்: தமிழக அரசு உத்தரவு

கணக்குப்பதிவியல், வணிகவியல் பாடங்களில் சிறப்புக் கவனம் தேவை: பள்ளிக் கல்வித் துறை

முப்படை தலைமைத் தளபதியின் பதவிக்காலம் 8 மாதங்களுக்கு நீட்டிப்பு

ஜம்மு - காஷ்மீா்: பஹல்காம் பயங்கரவாதிகளுக்கு உதவியவா் கைது

இளைஞரைத் தாக்கி வழிப்பறி: 4 போ் கைது

SCROLL FOR NEXT