இந்தியா

அமலாக்கத்துறை விசாரணைக்கு கேஜரிவால் ஆஜராகவில்லை!

DIN

தில்லி: தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று விசாரணைக்கு ஆஜராக முடியாது என்று அமலாக்கத்துறைக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் துணை முதல்வர் மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் உள்ளிட்டோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, கலால் கொள்கை ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகக் கோரி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு அமலாக்கத் துறை திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் தில்லி முதல்வர் கேஜரிவால் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதால், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதுகுறித்து அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியுள்ள கேஜரிவால், “அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் தெளிவில்லாமல் இருக்கிறது. 5 மாநில தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு இன்று ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். விசாரணைக்கு ஆஜராக வேறு தேதி ஒதுக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இதே வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.) முதல்வா் கேஜரிவாலை அழைத்து விசாரணை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10ம் வகுப்பு தேர்வு முடிவு: 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள்

10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள்: அரியலூர் முதலிடம்.... முதல் 5 மாவட்டங்கள்!

கணக்கில் கலக்கிய புலிகள்: சதமடித்து சாதித்த மாணவர்கள்!

பத்தாம் வகுப்புத் தோ்வு முடிவு: 91.55% பேர் தேர்ச்சி

தஞ்சாவூரில் ரயில் அபாய சங்கிலி இழுத்து விவசாயிகள் போராட்டம்

SCROLL FOR NEXT