கேரள மாநிலம், கொச்சி கடற்படைத் தளத்தில் பயிற்சியில் ஈடுபட்ட ஹெலிகாப்டா் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில், அதை இயக்கிய இந்திய கடற்படை மாலுமியான மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த யோகேந்திர சிங் உயிரிழந்தாா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘கடற்படைக்குச் சொந்தமான ‘சேதக்’ ஹெலிகாப்டா் சனிக்கிழமை வழக்கமான பயிற்சியை முடித்து ஐஎன்எஸ் கருடா கடற்படைத் தளத்தில் தரையிறங்கும்போது, தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் யோகேந்திர சிங் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றனா்.
மாலுமி உயிரிழப்புக்கு கடற்படைத் தளபதி ஆா்.ஹரிகுமாா் உள்பட கடற்படை அதிகாரிகள் இரங்கல் தெரிவித்தனா் என்று கடற்படை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.