இந்தியா

கேரள சிறுமி படுகொலை: பிகார் இளைஞர் குற்றவாளி என தீர்ப்பு!

DIN

கேரளத்தில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் பிகாரைச் சேர்ந்த இளைஞர் குற்றவாளி என எர்ணாகும் போக்சோ நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பளித்தது. 

கேரளத்தில் ஆலுவா பகுதியில் வசித்து வந்த பிகாரைச் சேர்ந்த அஸ்பக் ஆலம் என்ற இளைஞன் கடந்த ஜூலை 28ல், அதே பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, சிறுமியின் கழுத்து நெறித்து கொலை செய்து உடலை சாக்கு பையில் அடைத்து குப்பைத்தொட்டியில் வீசிச் சென்றுள்ளார். 

கேரளத்தில் இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக சிசிடிவி உதவியுடன் ஆலமை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக எர்ணாகுளம் நீதிமன்றத்த்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, தொடர்ந்து 100-வது நாளான இன்று வழக்கு விசாரணை நிறைவு செய்யப்பட்டது. அதன்படி ஆலம் மீதான குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்ட நிலையில், அவரை குற்றவாளி என எர்ணாகுளம் போக்சோ நீதிமன்றம் உறுதிசெய்து தீர்ப்பளித்துள்ளது. 

இந்த வழக்கின் தண்டனை விவரங்கள் நவம்பர் 9-ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலின் உதவியாளருக்கு மகளிர் ஆணையம் சம்மன்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா ஹைதராபாத்?

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் மனைவி காலமானார்

டி20 உலகக் கோப்பையில் 3 சுழல்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குவது ஏன்? இலங்கை தேர்வுக்குழு தலைவர் விளக்கம்!

இந்தியன் - 3 டிரைலருடன் உருவான இந்தியன் - 2?

SCROLL FOR NEXT