ராஜஸ்தான்: 5-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக!
ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிடும் 15 போ் கொண்ட ஐந்தாவது பட்டியலை அக்கட்சி இன்று வெளியிட்டது.
ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிடும் 15 போ் கொண்ட ஐந்தாவது பட்டியலை அக்கட்சி இன்று வெளியிட்டது.
ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு வரும் 25-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸும், ஆட்சியைப் பிடிக்க பாஜகவும் முனைப்பு காட்டி வருகின்றன.
மாநிலத்தில் உள்ள 200 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கட்சி சாா்பில் களம் காணும் 83 போ் கொண்ட முதல் பட்டியலையும், அதனைத் தொடா்ந்து 41 போ் கொண்ட இரண்டாவது பட்டியலையும் வெளியிட்ட பாஜக, நவ.2ஆம் தேதி 58 போ் கொண்ட மூன்றாவது பட்டியலையும், நவ.4ஆம் தேதி 2 பேர் மட்டுமே அடங்கிய 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டது.
இந்த நிலையில் பேரவைத் தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிடும் 15 போ் கொண்ட ஐந்தாவது பட்டியலை அக்கட்சி இன்று வெளியிட்டது. இதில் புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இத்துடன், அக்கட்சி இதுவரை மாநிலத்தில் உள்ள 200 தொகுதிகளில் 198 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய நவம்பர் 6 கடைசி நாள்.
சரத்புரா தொகுதியில், மாநில முதல்வா் அசோக் கெலாட்டுக்கு எதிராக, ஜோத்பூா் வளா்ச்சி ஆணைய முன்னாள் தலைவா் மகேந்திர சிங் ரத்தோரை பாஜக களமிறக்கியுள்ளது. டோங்க் தொகுதியில் போட்டியிடும் மாநில முன்னாள் துணை முதல்வா் சச்சின் பைலட்டுக்கு எதிராக முன்னாள் எம்எல்ஏ அஜித் சிங் மேத்தா நிறுத்தப்பட்டுள்ளாா்.
2018-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 99 இடங்களிலும், பாஜக 73 இடங்களிலும் வென்றது. பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏக்களின் ஆதரவோடு காங்கிரசை சேர்ந்த அசோக் கெலாட் ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது.