இந்தியா

ராஜஸ்தான் தேர்தல்: 5-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி!

வேட்பு மனுத் தாக்கலுக்கான கடைசி நாளான இன்று (நவம்பர் 6) ஆம் ஆத்மி கட்சி 5-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

DIN

ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் 2 பேர் கொண்ட ஐந்தாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (நவம்பர் 6) அக்கட்சி வெளியிட்டது. 

ஆம் ஆத்மி கட்சி முதற்கட்ட பட்டியலில் 23 வேட்பாளர்களையும், 2-ம் கட்ட பட்டியலில் 21 வேட்பாளர்களையும், 3-ம் கட்ட பட்டியலில் 16 வேட்பாளர்களையும், 4-ம் கட்ட பட்டியலில் 26 வேட்பாளர்களையும் அறிவித்தது.

200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நவம்பர் 6 கடைசி நாளாகும். அதன்படி இன்று அறிவிக்கப்பட்டுள்ள 2 வேட்பாளர்களையும் சேர்த்து, ராஜஸ்தானில் 88 தொகுதிகளில் வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது ஆம் ஆத்மி கட்சி.

இதேபோல சத்தீஸ்கரில் 57 தொகுதிகளிலும், மத்திய பிரதேசத்தில் 70 தொகுதிகளிலும் அக்கட்சி போட்டியிடுகிறது. 

ராஜஸ்தானில் நவம்பர் 25-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. டிசம்பர் 3 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். 

2018-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 99 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. பாஜக 73 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT