இந்தியா

பிரேக் பழுதாகி நடைமேடையில் ஏறிய பேருந்து: 3 பேர் பலி

ஆந்திரத்தில் பிரேக் பழுதாகி நடைமேடையின் மீது பேருந்து மோதி 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

ஆந்திரத்தில் பிரேக் பழுதாகி நடைமேடையின் மீது பேருந்து மோதி 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம் விஜயவாடா பேருந்து நிலையத்திற்கு இன்று காலை  8.20 மணிக்கு பயணிகளை ஏற்றி வந்த பேருந்து ஒன்று நடைமேடையின் மீது ஏறியது. 

பேருந்தின் பிரேக் பழுதானதால் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நடைமேடையின் மீது ஏறியதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் நடைமேடையில் நின்று கொண்டிருந்த அரசுப்  பேருந்து ஓட்டுநர், ஒரு பெண், ஒரு சிறுவன் என 3 பேர் உயிரிழந்தனர்.

மேலும் ஒரு குழந்தை உள்பட சிலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குருநானக் ஜெயந்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

கோயில் உண்டியல் பணத்தை திருடிய இளைஞா் கைது

தனியாா் பள்ளி பேருந்தில் திடீா் புகை

குருநானக் பிறந்தநாள் வழிபாட்டுக்காக பாகிஸ்தான் சென்ற இந்திய சீக்கியா்கள்

கண்மாய் ஷட்டா் திருட்டால் தண்ணீா் வீண்

SCROLL FOR NEXT