இந்தியா

கேஜரிவால் மனைவிக்கு அனுப்பப்பட்ட சம்மனுக்குத் தடை!

DIN

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் மனைவிக்கு அனுப்பப்பட்ட சம்மனுக்கு தில்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் மனைவி சுனிதா கேஜரிவால், தில்லியின் சந்தனி தொகுதி மற்றும் உத்தர பிரதேசத்தில் ஷஹீதாபாத் தொகுதி என இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதாக பாஜகவின் ஹரிஷ் குரானா வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கில் சுனிதா கேஜரிவால் நவ. 18 ஆம் தேதி ஆஜராக வேண்டுமென  தில்லி பெருநகர குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கின் விசாரணை இன்று தில்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி அமித் பன்சால் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. 

அப்போது, வருகிற 2024 பிப்ரவரி 1 ஆம் தேதி வரை சுனிதா கேஜரிவாலுக்கு அனுப்பப்பட்ட சம்மனுக்குத் தடை விதிப்பதாக நீதிபதி உத்தரவிட்டு வழக்கை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாறு காணாத உச்சம்.. மகிழ்ச்சியில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்!

பெண்களுக்கு சமஅதிகாரமளிக்கும் இந்தியாவை உருவாக்குவோம் - சோனியா

மாட்டிறைச்சி தயார் செய்து வையுங்கள்: அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் பதில்!

திரைப்படமாகும் கருப்பின நாயகனின் வாழ்க்கை!

எப்படி இருந்திருக்க வேண்டியவர்... பிரபல நடிகருக்கு என்ன ஆனது?

SCROLL FOR NEXT