இந்தியா

பிகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து: நிதீஷ் குமார் கோரிக்கை!

பிகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் நிதீஷ் குமார் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். 

DIN

பிகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் நிதீஷ் குமார் மத்திய அரசிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார். 

பிகார் சட்டப்பேரவையில் குளிர்கால கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் நிதீஷ்குமார்,

பிகார் மாநிலம் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது. எனவே, பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும். அப்படியென்றால் மட்டுமே எங்கள் மாநிலம் முன்னேற முடியும். 

பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திவிட்டோம். அதுபோல நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும். 

நாட்டில் இதுவரை சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில் சில சாதியினர் அதிகரித்துவிட்டதாகவும், சில சாதியினர் குறைந்துவிட்டதாகவும் நீங்கள் எப்படி கூறுகிறீர்கள்? இது போலியான பேச்சு. எனவே நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்' என்றார். 

மேலும் இட ஒதுக்கீட்டு வரம்பை 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாகவும், உயர்சாதி வகுப்புகளுக்கு வழங்கப்படும் 10 சதவீத இட ஒதுக்கீடு சேர்த்து 75% ஆக உயர்த்தும் முடிவையும் முன்வைத்துள்ளார். 

முன்னதாக, சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வின் முழு விவரங்களை சட்டப்பேரவையில் நிதீஷ் குமார் இன்று வெளியிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT