பிரியங்கா காந்தி 
இந்தியா

சில தொழிலதிபர்களுக்காகவா நாட்டின் வளம்? பிரியங்கா கேள்வி!

சில தொழிலதிபர்களுக்காக மட்டும்தான் நாட்டின் வளமா என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

DIN


சில தொழிலதிபர்களுக்காக மட்டும்தான் நாட்டின் வளமா? அவர்களுக்கு மட்டும் வாரிவழங்கப்படுகிறது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

சத்தீஸ்கர் மாநிலம் குருத் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், நாட்டின் வளத்தை ஒருசிலருக்கு மட்டுமே பாஜக வாரிவழங்குகிறது. இன்று நாட்டின் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் அதானிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதானி என்பவர் யார்? அதானி உங்களுக்கு (பொதுமக்களுக்கு) என்ன செய்தார்? அதானி எத்தனை வேலைவாய்ப்புகளை உருவாக்கினார் எனக் கூறமுடியுமா?

டாடா வாகனங்களை உற்பத்தி செய்கிறது. பிர்லாவும் என்ன செய்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அதானியும் அம்பானியும் எதை உருவாக்கினார்கள்? அவர்களுக்காக பணிபுரியும் தொழிலாளர்கள் எண்ணிக்கை எவ்வளவு?

எத்தனை வேலைவாய்ப்புகளை அவர்கள் உருவாக்கினார்கள்? மீண்டும் சொல்கிறேன். அவர்கள் பொதுமக்களுக்காக எதையும் செய்யவில்லை. ஆனால், பொதுமக்களின் வாக்குகள் மட்டும் அவர்களுக்கு தேவைப்படுகிறது எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

SCROLL FOR NEXT