மேற்கு வங்கத்தில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 3.6 -ஆகப் பதிவு
மேற்கு வங்கம் மாநிலத்தில் புதன்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ரிக்டர் அலகுகளாகப் பதிவானது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
அலிபுர்துவார் (மேற்கு வங்கம்): மேற்கு வங்கம் மாநிலத்தில் புதன்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ரிக்டர் அலகுகளாகப் பதிவானது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு வங்க மாநிலம் அலிபுர்துவார் மாவட்டத்தில் புதன்கிழமை காலை 10 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 14 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 3.6 ரிக்டர் அலகுகளாகப் பதிவானது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.
முன்னதாக, ஆகஸ்ட் மாதம், மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் இதே அளவு நிலநடுக்கம் பதிவானது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.