தில்லியில் வெளிமாநில டாக்ஸிகள் நுழையத் தடை!
காற்று மாசுபாடு காரணமாக தில்லி நகரத்துக்குள் வெளிமாநில வாடகைக் கார்கள் நுழைவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
காற்று மாசுபாடு காரணமாக தில்லி நகரத்துக்குள் வெளிமாநில வாடகைக் கார்கள் நுழைவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி மற்ற மாநில பதிவெண்கள் கொண்ட வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், டெல்லி பதிவெண் கொண்ட வாகனங்கள் மட்டுமே நகருக்குள் செல்ல அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் காற்று மாசுபாடு மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. இதனால், நவம்பர் 18 வரை தில்லி அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
தில்லி காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில் மரங்கள், மற்றும் சாலையோரம் லாரிகளில் வாகனங்களின் உதவியுடன் தண்ணீர் தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆப்கள் மூலமாக சேவை வழங்கும் டாக்ஸிகளுக்கு டெல்லி அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதேபோல மாசு மேலும் அதிகரிக்காமல் இருக்க பிஎஸ் 3 மற்றும் பிஎஸ் 4 வாகனங்கள் தில்லிக்குள் இயக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சிஎன்ஜி எனப்படும் கேஸ் மூலமாக இயங்கும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.