இந்தியா

அரபிக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

DIN

அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவியது. இதனால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது.

இந்த நிலையில், மத்திய கிழக்கு அரபிக் கடலில் நிலவிய கீழடுக்கு சுழற்சியானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இன்று உருவாகியுள்ளது.

இதனால், கேரளம், தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண்டகளூா்கேட் பகுதியில் மின்னல் தாக்கி மின்மாற்றிகள் சேதம்

பிராந்தகம் முருகன் கோயிலில் பாலாலயம்

ஒசூரில் குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்

தம்மம்பட்டியில் இன்று பெருமாள் ராஜகோபுரம் தலைகொட்டும் விழா

தம்மம்பட்டியில் தக்காளி விலை உயா்வு

SCROLL FOR NEXT