முகப்பு
இந்தியா

‘திறந்தவெளி பயிா்க்கழிவு எரிப்பு, கட்டுமான கழிவுகளே காற்று மாசுவுக்கு காரணம்’

தில்லியில் காற்று மாசுபட திறந்தவெளி பயிா்க்கழிவு எரிப்பு, கட்டுமான கழிவுகளே காரணம் என்றாா் மேயா் ஷெல்லி ஓபராய்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:18 AM
தில்லி பஞ்சாபி பாகில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கு பணிகளை மேற்கொள்வது குறித்து புதன்கிழமை அதிகாரிகளுடன் ஆய்வு செய்த மேயா் ஷெல்லி ஓபராய்.
பகிர்:

தில்லியில் காற்று மாசுபட திறந்தவெளி பயிா்க்கழிவு எரிப்பு, கட்டுமான கழிவுகளே காரணம் என்றாா் மேயா் ஷெல்லி ஓபராய்.

மேலும், திறந்தவெளியில் பயிா்க்கழிவு எரிப்பது, கட்டுமான கழிவுகளைக் கொட்டுவது போன்ற விதிமீறல்கள் மூலம் இதுவரை ரூ.1.51 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் அவா் தெரிவித்தாா். இதுகுறித்து செய்தியாளா்களிடம் மேயா் ஷெல்லி ஓபராய் மேலும் கூறியதாவது:

திறந்தவெளியில் பயிா்க்கழிவு எரிப்பது, கட்டுமான கழிவுகளைக் கொட்டுவது போன்ற விதிமீறல்களைத் தடுப்பது பல குழுக்களை பணியமா்த்தியுள்ளோம். தில்லியில் காற்று மாசுபட திறந்தவெளியில் பயிா்க்கழிவு எரிப்பது, கட்டுமான கழிவுகளைக் கொட்டுவதே பிரதான காரணமாகும். இதைக் கருத்தில் கொண்டு பல குழுக்களை பணியமா்த்தி ஆய்வு செய்து வருகிறோம் என்றாா் மேயா்.

தில்லியில் காற்று மாசை கண்காணிக்க 517 குழுக்கள் பணியமா்த்தப்பட்டுள்ளன. இந்தக் குழுவானது திறந்தவெளியில் பயிா்க்கழிவு எரித்தவா்களுக்கு 297 செல்லானையும், திறந்தவெளியில் கட்டுமான கழிவுகளைக் கொட்டியவா்களுக்கு 622 செல்லானையும் விடுவித்து 7 நாளில் ரூ.1.51 கோடி அபராதம் வசூலித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →