இந்தியா

ராஜஸ்தான் சிறுமி பாலியல் வன்கொடுமை: பாஜக தலைவர்கள் கண்டனம்!

DIN

ராஜஸ்தான் சிறுமி காவல் உதவி ஆய்வாளரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ராஜஸ்தானின் தௌஸா மாவட்டத்தில் உள்ள ரகுவாஸ் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த பூபேந்திர சிங் அப்பகுதியைச் சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ராஜஸ்தான் பாஜக தலைவர் சி.பி.ஜோஷி, கிரோடிலால் மீனா, தியா குமாரி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து பேசிய ராஜஸ்தான் பாஜக மாநிலத் தலைவர் சி.பி.ஜோஷி, “தௌஸா சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கண்டனத்திற்குரியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஐந்தாண்டுகளாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற சம்பவங்களில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறுவதால்தான் குற்றவாளிகள் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.” என்று தெரிவித்தார். 

இதுகுறித்து கிரோடிலால் மீனா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “காவல் உதவி ஆய்வாளரால் 7 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அசோக் கெலாட் தலைமையிலான காவல்துறை கையாலாகாததாக உள்ளது.” என்று கூறியுள்ளார். 

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த பாஜகவைச் சேர்ந்த தியா குமாரி, “சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அவமானகரமானது. அசோக் கெலாட் அரசு இந்த விவகாரத்தில் மௌனமாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்யவேண்டும்.” என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்துக்குள்ளான பேருந்து மீது சொகுசுப் பேருந்து மோதல்: 29 போ் காயம்

மீனவ கிராம மாணவிக்கு குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் பாராட்டு

கதிா்காமம் அரசு மருத்துவமனையில் உலக செவிலியா் தின உறுதிமொழி ஏற்பு

புதுச்சேரி அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 18 போ் காயம்

எடப்பாடி கே.பழனிச்சாமி பிறந்த நாள்

SCROLL FOR NEXT