இந்தியா

கேரள விவசாயி தற்கொலை: மாநில அரசும் வங்கிகளும் காரணமா?

கேரள விவசாயி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

DIN

ஆழப்புழா: கேரள மாநிலம் குட்டநாட்டைச் சேர்ந்த விவசாயி கே.ஜி.பிரசாத் என்பவர் விஷம் குடித்து இறந்துள்ளார்.  கடும் பொருளாதார நெருக்கடியால் இந்த முடிவை அவர் எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல் விவசாயியான பிரசாத், தகழி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர், வெள்ளிக்கிழமை (நவ.10) இரவு விஷம் அருந்தியதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. சிகிச்சை பலனின்றி இன்று (நவ.11) அதிகாலை அவர் இறந்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த முடிவை அவர் எடுத்ததாகக் காவலர்கள் தரப்பில் சொல்லப்பட்டாலும் விவசாயியின் நண்பர்கள், மாநில அரசு கொள்முதல் செய்த நெல்லுக்கு உரிய தொகை கிடைக்கப் பெறாததால் தான் அவர் இந்த முடிவை எடுத்ததாகச் சொல்கிறார்கள்.

தற்கொலை செய்து கொண்ட விவசாயி, குறிப்பு ஒன்றை எழுதி வைத்துள்ளார். அவரது இறப்புக்கான காரணமாக அதில் மாநில அரசையும் சில வங்கிகளையும் குறிப்பிட்டுள்ளார்.

பிரசாத், சாகுபடி செய்த நெல்லுக்கு மாநில அரசு உரிய தொகையைத் தராமல் அதற்கு பதிலாகக் கடன் கொடுத்துள்ளது. அதனை மாநில அரசு திருப்பி செலுத்ததால் விவசாயின் சிபில் குறைந்துள்ளது.

அதன் பிறகான தேவைகளுக்கு அவர் வங்கியை நாடி சென்ற போது எந்த வங்கியும் கடன் தர முன்வரவில்லை. குறைந்த சிபில் ஸ்கோர் என்பதால் மறுக்கப்பட்டுள்ளது. 4 ஏக்கர் நிலத்தில் நெல் விளைவித்துள்ள பிரசாத் கடும் பொருளாதார சிக்கலுக்கு ஆளாகியுள்ளார். 

இதனால் அவர் தற்கொலை முடிவுக்கு சென்றுள்ளதாகத் தெரிகிறது.

இது குறித்து மாநில அரசு சார்பில் எந்தப் பதிலும் தெரிவிக்கப்படவில்லை. கேரள மாநில ஆளுநர் ஆரீப் முகமது கான் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன் ஆகியோர் கேரள மாநிலத்தின் ஆளும் இடதுசாரி கூட்டணி கட்சியைக் குற்றம் சாட்டியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT