இந்தியா

கூட்டு பாலியல் வன்கொடுமை: பெண் உள்பட 5 பேர் கைது!

ஆக்ராவில் விடுதிப் பணிப் பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டார்.

DIN

ஆக்ராவில் விடுதியில் பணிபுரியும் பெண்ணைக் கூட்டு பாலியல் வன்கொடுமை இழைத்தது தொடர்பாக ஒரு பெண் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மோசமான சம்பவம், உத்தரப் பிரதேசத்தில் ஆக்ரா நகரில் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சுமார் 25 வயது இருக்கலாம்.

பெண்ணைச் சம்பந்தப்படுத்தி  ஆபாச விடியோவொன்றைத் தயாரித்து அவர் மிரட்டப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

அந்தப் பெண்ணைக் கட்டாயப்படுத்தி மதுவைக் குடிக்கச் செய்துள்ளனர். அவரைத் தலையில் பாட்டிலால் தாக்கியுள்ளனர்.

அவர் உதவி கேட்டு கதறுவதைப் போன்ற விடியோவொன்றும் சமூக ஊடகங்களில் பரவியது.

சம்பந்தப்பட்டவர்கள் மீது பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டு மட்டுமின்றி, கொலை முயற்சி வழக்கும் பதியப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கொடுமை சனிக்கிழமை இரவு நடந்திருக்கிறது. அந்தப் பெண்  தொலைபேசியில் அழைத்ததைத் தொடர்ந்து, விடுதிக்கு விரைந்து சென்று தொடர்புடையோர் மீது நடவடிக்கை எடுத்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

தொடர்ந்து, அந்த விடுதியும் மூடப்பட்டது. 

குற்றம் சாட்டப்பட்டுள்ளோர் அனைவருமே ஆக்ராவைச் சேர்ந்தவர்கள்தான். கைது செய்யப்பட்டவர்களில் 25 வயதுப் பெண்ணும் ஒருவர் என்று பஸாய் நிலைய காவல்துறை துணை ஆணையர் மோகித் சர்மா குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT