குற்றவாளி ஆஷ்ஃபாக் ஆலம். 
இந்தியா

கேரள சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை!

கேரள சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

DIN

கேரள சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

எா்ணாகுளம் மாவட்டத்தின் ஆலுவாவைச் சோ்ந்த 5 வயது சிறுமி, ஜூலை 28ல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டாள். பெற்றோருடன் அந்தச் சிறுமி வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பிகாா் மாநில புலம்பெயா் தொழிலாளி ஆஷ்ஃபாக் ஆலம் என்பவரை போலீஸாா் கைதுசெய்தனா். விசாரணையில் குற்றமிழைத்ததை அவா் ஒப்புக் கொண்டாா்.

இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட ஆலமின் குற்றப் பின்புலத்தைத் திரட்டும் முயற்சியில் போக்ஸோ வழக்கின்கீழ் ஆலம் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டு அவா் ஜாமீனில் விடுதலையாகியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து இது தொடர்பான வழக்கு எர்ணாகுளம் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில், ஆலம் மீதான குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்ட நிலையில், கடந்த நவம்பர் 4 ஆம் தேதி அவரை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

தொடர்ந்து தண்டனை விவரங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்பட்டன. அதன்படி குற்றவாளி ஆலமுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சம்பவம் நடந்து 109 நாள்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி பல்கலை.யின் 67 கல்லூரிகளுக்கு மீண்டும் யு-ஸ்பெஷல் பேருந்துகள் சேவை: முதல்வா் ரேகா குப்தா தொடங்கிவைத்தாா்

இளைஞா் கத்தியால் குத்தி கொலை: 4 போ் கைது

மடிக்கணினி திட்டத்துக்கான ஒப்பந்தம் விரைவில் முழுமை பெறும்: அமைச்சா் கோவி. செழியன்

தமிழகத்தில்தான் உயா்கல்வி பயிலும் மாணவா்கள் அதிகம்: பேரவை துணைத் தலைவா் பெருமிதம்

தோ்தல் ஆணையத்துக்கு எதிராக செப்.6-இல் போராட்டம்! வாக்குரிமை காப்பு இயக்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT