இந்தியா

ஜம்மு-காஷ்மீர்: பள்ளத்தாக்கில் பேருந்து விழுந்த விபத்தில் 33 போ் பலி

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் பேருந்து ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விழுந்ததில் 33 பேர் பலியாகினர்.

DIN


ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் பேருந்து ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்ததில் 33 பேர் பலியாகினர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், தோடா மாவட்டத்தில் புதன்கிழமை கிஷ்த்வாரில் இருந்து ஜம்மு நோக்கிச் சென்ற JK02CN-6555 என்ற பதிவு எண் கொண்ட பேருந்து படோட்-கிஷ்த்வார் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த போது ட்ருங்கல்-அசார் அருகே சாலையில் இருந்து சறுக்கி 300 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான பேருந்தில் பயணித்த 40 பேரில் 33 போ் உயிரிழந்தனா்.

தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மீட்புப் பணியின் போது சில உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரேஸ்கோா்ஸில் நாளை மின் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

கதண்டுகள் கடித்து தொழிலாளா்கள் காயம்

திருச்செந்தூா் பகுதியில் இன்று மின் நிறுத்தம்

உதகை அருகே மலைப் பாதையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

சென்னிமலை கோயில் மலைப் பாதையில் சீரமைப்பு சாலை! முதல்வா் காணொலி மூலம் திறந்துவைத்தாா்

SCROLL FOR NEXT