இந்தியா

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் தேர்தல் பிரசாரம் நிறைவு!

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று(புதன்கிழமை) மாலையுடன் நிறைவு பெற்றது.

DIN

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று(புதன்கிழமை) மாலையுடன் நிறைவு பெற்றது. 

சத்தீஸ்கர் மாநிலத்தில் 20 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த நவ. 7 ஆம் தேதி முதற்கட்டத் தேர்தல் நடைபெற்ற நிலையில் மீதியுள்ள 70 தொகுதிகளுக்கு வருகிற நவ. 17 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 

அதேபோல, 230 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசத்திலும் நவ. 17 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 

சத்தீஸ்கரில் பிரியங்கா காந்தி...

தேர்தல் ஆணைய விதிகளின்படி, இந்த இரு மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெற்றது.

கடந்த சில தினங்களாக இந்த இரு மாநிலங்களிலும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

சத்தீஸ்கரில் அமைச்சர் அனுராக் தாக்கூர்

ஏற்கெனவே மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த நவ. 7ல் ஒரே கட்டமாக நடைபெற்றது. 

ஐந்து மாநிலத் தேர்தலில் ராஜஸ்தானில் வருகிற நவ. 25 ஆம் தேதியும் தெலங்கானாவில் நவ. 30 ஆம் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற  உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2-வது டெஸ்ட்: இந்தியாவுக்கு 121 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மே.இ.தீவுகள்!

பிரதமர் மோடியுடன் கனட வெளியுறவு அமைச்சர் சந்திப்பு!

புதுப்பூங் கொன்றை... பாயல் ராதாகிருஷ்ணா!

ஹமாஸால் சிறைப்பிடிக்கப்பட்ட பிணைக்கைதிகள் அனைவரும் விடுவிப்பு: இஸ்ரேல் ராணுவம்

பிக் பாஸை விமர்சிப்பதால் எந்தப் பலனும் இல்லை: விஜய் சேதுபதி எச்சரிக்கை

SCROLL FOR NEXT