இந்தியா

அனுமதி மறுத்தாலும் பாலஸ்தீன ஆதரவு பேரணி நடத்தப்படும்: கே.சுதாகரன் திட்டவட்டம்

கேரள அரசு அனுமதி மறுத்தாலும், அதை மீறி பாலஸ்தீன ஆதரவு ஒற்றுமைப் பேரணி நடைபெறும் என கேரள காங்கிரஸ் அறிவித்துள்ளது.

DIN

கேரள அரசு பேரணிக்கு அனுமதி மறுத்தாலும், அதை மீறி பாலஸ்தீன ஆதரவு பேரணி நடைபெறும் என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் கூறியுள்ளார்.

நவம்பர் 23-ம் தேதி கோழிக்கோடு கடற்கரையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட பாலஸ்தீன ஆதரவு பேரணிக்கு அனுமதி மறுத்துள்ள மாவட்ட ஆட்சியர் சினேல் குமார் சிங்கின் உத்தரவை மீறி காங்கிரஸ் பேரணி நடத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

"பேரணிக்கு அனுமதி அளித்தாலும், அளிக்காவிட்டாலும் வரும் 23-ம் தேதி கோழிக்கோடு கடற்கரையில் பேரணி நடத்தப்படும். ஒன்று அங்கு பேரணி நடைபெறும் அல்லது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் நடைபெறும் " என கே.சுதாகரன் கூறினார்.

இஸ்ரேல் - ஹமாஸ் போர் குறித்த சசி தரூரின் உரையை விமர்சித்த கேரள முதல்வர் பினராயி விஜயனை தாக்கிப் பேசிய அவர், தரூரின் உரையில் இருந்து ஒற்றை வார்த்தையை மட்டும் எடுத்துக்கொண்டு பேசி வருவது முட்டாள்தனமான செயல் என்றார்.

முன்னதாக, இந்திய ஐக்கிய முஸ்லீம் லீக் பேரணியில் பேசிய சசி தரூர் ஹமாஸை ஒரு பயங்கரவாதக் குழு என்று குறிப்பிட்டார். அதையடுத்து சிபிஎம் கட்சித் தலைவர்கள் ஜலீல், ஸ்வராஜ் உள்ளிட்டவர்கள் சசி தரூரின் பேச்சு இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளதாக ஜலீல் கூறினார். 

பாலஸ்தீன ஆதரவு ஒற்றுமை பேரணிக்கு முதலில் அனுமதி வழங்கப்பட்டதாகவும், பின்பு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் சுதாகரன் தெரிவித்தார்.

நவம்.23-ஆம் தேதி கோழிக்கோட்டில் நடக்கவுள்ள பாலஸ்தீன ஆதரவு ஒற்றுமைப் பேரணியை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தொடங்கி வைக்க உள்ளதாக சுதாகரன் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகை: 7 மாதங்களில் ரூ.1.84 கோடி ரேஷன் பொருள்கள் பறிமுதல்

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

SCROLL FOR NEXT