கோப்புப்படம் 
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதிகள் 5 பேரை பாதுகாப்புப் படையினா் இன்று(வெள்ளிக்கிழமை) சுட்டுக் கொன்ற

DIN

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 5 பேரை பாதுகாப்புப் படையினா் இன்று(வெள்ளிக்கிழமை) சுட்டுக் கொன்றனா்.

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டையொட்டிய பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருந்ததாகத் தகவல் வெளியானதையடுத்து பாதுகாப்புப் படைகள் இன்று(வெள்ளிக்கிழமை) காலை ரோந்து பணியில் ஈடுபட்டன. 

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

இந்த மோதலில்  லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 5 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

குல்காம் காவல்துறை, ராணுவம் மற்றும் பாதுகாப்புப்படையினரால் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அவா்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் என்று மூத்த காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT