மாதிரிப் படம் 
இந்தியா

யுஜிசி நெட் தேர்வு அட்டவணை வெளியீடு!

யுஜிசி நெட் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

DIN

உதவிப் பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கான தகுதித் தேர்வான யுஜிசி நெட் தேர்வின் முழு அட்டவணையைத் தேசிய தேர்வு முகமை இன்று (நவ.17) வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி டிச.6-ம் தேதி தொடங்கி டிச.22 வரை தேர்வுகள் நடைபெறவுள்ளன.

எந்த நகரத்தில் தங்களுக்கான தேர்வு மையம் என்கிற தகவலை மாணவர்கள், தேர்வுக்கு 10 நாள்களுக்கு முன்பு இணையதளத்தின் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து தேர்வு நாள்களிலும் இரண்டு வேளைகளில் இந்தத் தேர்வு நடைபெறவிருக்கிறது. தேர்வுக்கான நுழைவுச் சீட்டு டிசம்பர் மாதத் தொடக்கத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் https://www.nta.ac.in/ என்ற இணையதளத்தில் விரிவான தேர்வு அட்டவணையைத் தரவிறக்கிக் கொள்ளலாம்.

இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசியர் மற்றும் இளநிலை ஆய்வு முனைவருக்கான தகுதித் தேர்வாக யுஜிசி நெட் ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கார்குழல் கடவையே... மாளவிகா மேனன்!

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

SCROLL FOR NEXT