கிரிதிஹ்: ஜார்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தில் சனிக்கிழமை சாலையோர மரத்தில் கார் மோதிக் கொண்ட விபத்தில், காரில் பயணம் செய்தவர்களில் ஐந்து பேர் பலியாகினர், இரண்டு குழந்தைகள் உள்ட ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.
இது குறித்து கிரிதிஹ் சதார் காவல்துறை அதிகாரி அனில் சிங் கூறுகையில், ஜார்கண்ட் மாநிலம், கிரிதிஹ் மாவட்டம் பிர்னி காவல் நிலைய எல்லைக்குட்ட தோரியா கிராமத்தில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள டிகோடியில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது முஃபாசில் காவல் நிலைய எல்லைக்குட்ட பகுதியிலுள்ள பாக்மாரா அருகே சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் சாலையோரத்தில் இருந்த மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், காரில் பயணித்த ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் படுகாயம் அடைந்த இரண்டு குழந்தைகள் ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், உயிரிழந்தோரின் உடல்களை மீட்டு, உடல் கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.