கோப்புப் படம். 
இந்தியா

அருணாசலில் நிலச்சரிவு: ஆன்மிக தலைவர் உள்ளிட்ட 4 பேர் பலி

அருணாசல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஆன்மிக தலைவர் உள்ளிட்ட 4 பேர் பலியாகினர். 

DIN

அருணாசல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஆன்மிக தலைவர் உள்ளிட்ட 4 பேர் பலியாகினர். 

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஆன்மிக தலைவர் உள்ளிட்டோர் அருணாசல பிரதேசத்தின் மேல் சுபன்சிரி மாவட்டத்தில் உள்ள டம்போரிஜோவில் மூன்று நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இட்டாநகர் நோக்கி வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். 

அப்போது இவர்களுடைய வாகனம் கம்லே மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மண்ணில் புதைந்தது. இந்த சம்பவத்தில் ஆன்மிக தலைவர் உள்ளிட்ட 4 பேர் பலியாகினர். நிகழ்விடத்துக்கு விரைந்த காவல்துறையினர், நேற்றிரவு சடலங்களை இடிபாடுகளில் இருந்து மீட்டனர். 

தொடர்ந்து அவற்றை உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அருணாசலில் நிலச்சரிவில் சிக்கி ஆன்மிக தலைவர் உள்ளிட்ட 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு கோப்பையை வழங்காத பாகிஸ்தான் அமைச்சருக்கு தங்கப் பதக்கம்?

நான் விஜய்யின் ரசிகை! ஆனால்... கரூர் பலி குறித்து காஜல் அகர்வால்!

தெறுழ்வீ மலர்ந்தன... தமன்னா!

அலாதி உற்சாகத்தில்... நிகிதா!

என்னிடம் ஒரு கேள்வி கேட்டால் எதிர்புறத்திலும் கேள்வி கேட்க வேண்டும்: செந்தில்பாலாஜி

SCROLL FOR NEXT