இந்தியா

தில்லியில் கட்டுப்பாடுகள் நீக்கம்: மத்திய அரசு

தில்லியில் காற்றின் தரம் மேம்பட்டதை அடுத்து கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியது.

DIN

தில்லியில் காற்றின் தரம் மேம்பட்டதை அடுத்து கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியது.

தலைநகரில் வெள்ளிக்கிழமை பெரும்பாலான இடங்களில் கடுமை பிரிவில் இருந்து காற்றின் தரக் குறியீடு சனிக்கிழமை வெகுவாகக் குறைந்து மிகவும் மோசம் பிரிவுக்கு மேம்பட்டது.

கடந்த வார இறுதியில் ஒப்பீட்டளவில் சிறந்த காற்றின் தரம் மேம்பட்டதற்கு மழை காரணமாக இருந்தது. ஆனால், தீபாவளி இரவில் பட்டாசு வெடித்ததாலும், அண்டை மாநிலங்களில் மீண்டும் பயிா்க்கழிவுகள் எரிப்பு சம்பவங்கள் அதிகரித்ததாலும் காற்று மாசு அளவு அதிகரித்தது.

இதையடுத்து, நகர அரசும் கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதித்தல் மற்றும் டீசல் வாகனங்கள், கனரக வாகனங்கள் தேசியத் தலைநகருக்குள் நுழைவதற்கு தடை உள்ளிட்ட பல கடுமையான நடவடிக்கைகளைச் செயல்படுத்தியது. இது மறு உத்தரவு வரும் வரை தொடரும் என்றும் அரசு தெரிவித்திருந்தது. 

இந்த நிலையில், தில்லிக்குள் கனரக வாகன நுழைவுக்குத் தடை உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகளை மத்திய நீக்கியது.

மேலும். அத்தியாவசியமற்ற கட்டுமானப் பணிகள், டீசல் ஜெனரேட்டர்கள் உள்ளிட்டவற்றுக்கு தடை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT