இந்தியா

கேரளத்தில் தொடரும் கனமழை: ஐயப்ப பக்தர்கள் அவதி!

DIN

கேரளத்தின் பல பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். 

மழை நிலவரம் தொடர்பாக இந்திய வானிலை வெளியிட்ட தகவலில், கேரளத்தில் கனமழை தொடர்ந்து வருவதால் இன்று இடுக்கி மற்றும் பத்தனம்திட்டா ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், 

கன்னூர் மற்றும் காசர்கோடு தவிர மற்ற அனைத்து மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய கேரளப்பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாள்களுக்கு கேரளத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். 

நவம்பர் 22 - 24 வரை மாநிலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பத்தனாம்திட்டாவில் கனமழை பெய்து வருவதால் சபரிமலைக்கு செல்லும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் மலையேற முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT