இந்தியா

மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் சடலம்: கொல்கத்தா மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

தண்டவாளத்தில் மனித உடல் ஒன்று கிடந்ததை அடுத்து ரயில் நிறுத்தப்பட்டதால், கொல்கத்தா மெட்ரோ ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

DIN

கொல்கத்தா: கொல்கத்தாவில் டோலிகஞ்ச் மற்றும் ரவீந்திர சரோபார் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையே புதன்கிழமை தண்டவாளத்தில் மனித உடல் ஒன்று கிடந்ததை அடுத்து ரயில் நிறுத்தப்பட்டதால், கொல்கத்தா மெட்ரோ ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொல்கத்தாவில் டோலிகஞ்ச் மற்றும் ரவீந்திர சரோபார் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையே மெட்ரோ ரயில் சென்று கொண்டிருந்த போது புதன்கிழமை காலை 9 மணியளவில் தண்டவாளத்தில் மனித உடல் ஒன்று கிடந்ததை ஓட்டுநர் கவனித்துள்ளார். 

இதையடுத்து ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்திவிட்டு மெட்ரோ ரயில் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து டோலிகஞ்ச் மற்றும் கபி சுபாஸ் நிலையத்திற்கு மெட்ரோ ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இது குறித்து மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: 

டோலிகஞ்ச் மற்றும் ரவீந்திர சரோபார் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையே புதன்கிழமை தண்டவாளத்தில் மனித உடல் ஒன்று கிடந்ததை கண்ட ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்திவிட்டு அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார்.  

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே அதிகாரிகள், உடலை தண்டவாளத்தில் இருந்து மீட்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தண்டவாளத்தில் இருந்து சடலம் மீட்கப்பட்டதும் விரைவில் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என நம்புவதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

இருப்பினும், தக்கினேஸ்வரில் இருந்து மைதானம் வரை மெட்ரோ ரயில் இயங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT