மீட்புப் பணியில் அதிகாரிகள் 
இந்தியா

12 மீட்டர் துளையிட வேண்டும்; நள்ளிரவுக்குள் மீட்க நடவடிக்கை!

சுரங்கத்தில் இன்னும் 12 மீட்டர் மட்டுமே துளையிட வேண்டியுள்ளதால், இன்று இரவு 11.30 மணிக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்டுவிடலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

DIN


உத்தரகண்ட் சுரங்க விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க 57 மீட்டர் துளையிட வேண்டிய நிலையில், 45 மீட்டருக்கு வெற்றிகரமாக துளையிடப்பட்டுள்ளது. 

இன்னும் 12 மீட்டர் மட்டுமே துளையிட வேண்டியுள்ளதால், இன்று இரவு 11.30 மணிக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்டுவிடலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கிடைமட்ட துளையிடல் மூலம் தற்போது 39 மீட்டர் தூரத்துக்கு 800 ஸ்டீல் குழாய் மூலம், சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

மீட்புப் பணிகளில் வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 12 மீட்டர் மட்டுமே துளையிட வேண்டியுள்ளதால், மீட்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 

சுரங்கத்தில் சிக்கியவர்கள் குழாய் வழியாக மீட்கப்பட்டவுடன், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அருகில் சின்யாலிசோர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

உத்தரகண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் சுமாா் 4.5 கி.மீ. தொலைவுக்கு கட்டப்பட்டு வரும் இருவழி சுரங்கப் பாதை கடந்த 12-ஆம் தேதி ஏற்பட்ட திடீா் நிலச்சரிவைத் தொடா்ந்து இடிந்தது.   

சுரங்கப் பாதைக்குள் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளா்கள், கடுமையான இடிபாடுகளுக்குப் பின்னால் சிக்கிக் கொண்டனா். அவா்களைப் பாதுகாப்பாக மீட்க பலமுனை முயற்சிகள் போா்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT