முகப்பு
இந்தியா

ஆந்திரத்தில் மதிய உணவு சாப்பிட்ட பள்ளி மாணவர்களுக்கு உடல்நலக் குறைவு!

ஆந்திரத்தில் அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:24 AM
கோப்புப்படம்
பகிர்:


ஆந்திரத்தில் அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 

அன்னமய்யா மாவட்டத்தின் தெகுலபாலம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 15-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளனர்.

வருவாய் பிரிவு அலுவலர் (ஆர்.டி.ஓ.) முரளி, மருத்துவமனைக்குச் சென்று மாணவர்களின் நிலைமையைக் கேட்டறிந்தார். நிலைமை மோசமாக இல்லை என்றும், அனைத்து மாணவர்களுக்கும் முதற்கட்ட சிகிச்சை வழங்கப்பட்டதாகவும், பூரண குணமடைந்ததும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் உறுதியளித்தார்.

மேலும், மாணவர்கள் சாப்பிட்ட உணவு குறித்து சோதனை நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →