இந்தியா

பாஜகவினர் 15 தொகுதிகளை தாண்டுவார்களா என்று பார்க்கலாம்: பூபேஷ் பகேல் கிண்டல்!

சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க.வால் 15 தொகுதிகளில் முதலில் வெற்றி பெற முடியுமா என்று பார்க்கலாம் என பூபேஷ் பகேல் தெரிவித்துள்ளார்.

DIN

சத்தீஸ்கர் தேர்தலில் பா.ஜ.க.வால் 15 தொகுதிகளில் முதலில் வெற்றி பெற முடியுமா என்று பார்க்கலாம் என அம்மாநில முதல்வர் பூபேஷ் பகேல் தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்திற்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ஆம் தேதி நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த சத்தீஸ்கரின் முன்னாள் முதல்வர் ரமண் சிங் 55 தொகுதிகளில் பாஜக வெற்றிபெறும் என்று கூறியிருந்தார். 

இதற்கு பதிலளிக்கும் வகையில் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் பேசியதாவது, “ரமண் சிங் சத்தீஸ்கர் மாநில பாஜக தலைவராகவும், சத்தீஸ்கர் முதல்வராகவும் உச்சக்கட்ட புகழில் இருந்தபோதே 52  தொகுதிகளைத் தாண்ட முடியவில்லை. 

அப்படியிருக்கும்போது தற்போது எப்படி பாஜகவினரால் 55 தொகுதிகளில் வெற்றிபெற முடியும். அதெல்லாம் அவர்களின் கட்சியினருக்கு ஊக்கமளிப்பதற்காக பேசுவது.

பாஜகவினர் முதலில் 15 தொகுதிகளை தாண்டுவார்களா என்பதை பார்க்கலாம். டிசம்பர் 3-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும். அப்போது மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜகவினரால் 15  தொகுதிகளையாவது கைப்பற்ற முடிந்ததா என்பதை அனைத்து மக்களும் அறிந்துகொள்வார்கள்." என்று பூபேஷ் பகேல் தெரிவித்தார்.

90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 68 தொகுதிகளைக் கைப்பற்றிய காங்கிரஸ் ஆட்சியமைத்தது. பாஜக 15 தொகுதிகளில் மட்டும் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விழியிரண்டும்... ராஷி சிங்!

ம.பி: கோயிலில் கூட்டநெரிசல்! 2 பெண் பக்தர்கள் பலி... 5 பேர் படுகாயம்!

ஆயிரம் ஃபாலோயர்ஸ் இல்லாதவர்களுக்கு நேரலை கிடையாது: இன்ஸ்டாகிராம் புதிய விதி!

கருவிழிகள் பேசுதே... ஜன்னத் ஜுபைர்!

இயக்குநர்களின் பாராட்டில் பரிதாபங்கள் விடியோ! குவியும் வாழ்த்துகள்!

SCROLL FOR NEXT