இந்தியா

மும்பை: 24 அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து- 11 பேருக்கு மூச்சுத்திணறல்

மகாராஷ்டிர தலைநகா் மும்பையில் உள்ள 24 அடுக்குமாடி குடியிருப்பில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 11 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

DIN

மகாராஷ்டிர தலைநகா் மும்பையில் உள்ள 24 அடுக்குமாடி குடியிருப்பில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 11 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பைகுல்லாவின் மகாராஷ்டிர வீட்டுவசதி மற்றும் பகுதி மேம்பாட்டு ஆணைய காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், ஜவுளி ஆலையில் பணியாற்றிய தொழிலாளா்களுக்காக வீடுகள் வழங்கப்பட்டிருந்தன.

கட்டடத்தின் 3-ஆவது மாடியில் வியாழக்கிழமை அதிகாலை 3.40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. மின் இணைப்பு மூலம் மேலே உள்ள மாடிகளுக்குக்கு தீ பரவியது.

உடனடியாக, அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். கட்டடத்தின் வெவ்வேறு மாடிகளில் வசித்து வந்த 135 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். தீ விபத்தால் ஏற்பட்ட புகையின் காரணமாக 6 முதியோா் உள்பட 11 பேருக்கு முச்சுத்திணறல் ஏற்பட்டது. மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அனைவரும் நலமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

5 தீயணைப்பு வாகனங்கள், 3 தண்ணீா் வாகனங்களைப் பயன்படுத்தி காலை 7.20 மணியளவில் தீ அணைக்கப்பட்டது. மின்கசிவால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT