இந்தியா

காதலனை மணமுடிக்க செல்போன் கோபுரத்தில் ஏறிய காதலி!

காதலனை திருமணம் செய்துகொள்ள பெற்றோரின்  சம்மதத்தை  பெற இளம்பெண் ஒருவர் செல்போன் உயர்கோபுரத்தில் ஏறிய  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

லக்னோ :  உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் தன் காதலனை திருமணம் செய்துகொள்ள அவரின் பெற்றோரின்  சம்மதத்தை  பெற, செல்போன் உயர்கோபுரத்தில் ஏறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயதான இளம்பெண் ஒருவர், அதே பகுதியை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவரை, கடந்த சில வருடங்களாக ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், தன் மனம் கவர்ந்த நபரை மணமுடிக்க அவர் விருப்பம்
கொண்டார். இதனையடுத்து, தனது காதலை அந்த இளைஞரின் வீட்டாருக்கு தெரியப்படுத்தி, அவர்களிடமிருந்து சம்மதம் பெறுவதற்காக அந்த பெண்மணி வித்தியாசமான முறையை கையாண்டுள்ளார்.

சேம்ரா ராஜா சுங்கச்சாவடி பகுதியில் அமைந்துள்ள 50 மீட்டர் உயர செல்போன் கோபுரத்தில் ஏறி நின்றுகொண்டு, சற்று வித்தியாசமான முறையில் தனது விருப்பத்தை காதலனுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில், இதை வேடிக்கை பார்ப்பதற்கென அங்கு பெருங்கூட்டம் கூடிவிட்டது. இதன்காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், கூட்டத்தை கலைத்து போக்குவரத்தை சரி செய்தனர்.

அங்கு வேடிக்கை பார்க்க கூடியிருந்த சிலர், நடந்த சம்பவம் அனைத்தையும்,  தங்கள் கைப்பேசிகளில் விடியோவாக பதிவு செய்ததையும் காண முடிந்தது.    

செல்போன் கோபுரத்தில் நின்றுகொண்டு, தன் காதலனை திருமணம் செய்ய அவரது பெற்றோர் சம்மதம்  தெரிவிக்கும் வரை கீழே வரமாட்டேன் என பிடிவாதம் பிடித்த அந்த பெண்ணை,  காவல்துறை அதிகாரிகள் சமாதானப்படுத்தி அவரை கீழே இறங்கச் செய்ய முயற்சி மேற்கொண்டனர். இருப்பினும், அவர் கீழே இறங்கி வர தொடர்ந்து மறுத்து வந்ததாக கூறப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து, காவலர் ஒருவர் கோபுரத்தின் மீது ஏறிச் சென்று, அந்த பெண்ணை சமாதானப்படுத்தி கீழே அழைத்து வந்துள்ளார். 

மேலும், இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபோன்ற சம்பவங்கள் சற்று வினோதமாக இருந்தாலும், ”காதல்” மனிதர்களை எந்தளவிற்கு பாடாய்ப்படுத்துகிறது என்பதற்கு உதாரணமாகவும் இச்சம்பவம் விளங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

கூட்டுறவும் நாட்டுயா்வும்!

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT