இந்தியா

கொச்சி: குசாட் பல்கலை.யில் நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் பலி

கொச்சியில் உள்ள குசாட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் பலியாகினர். 

DIN

கொச்சியில் உள்ள குசாட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் பலியாகினர். 

கேரள மாநிலம், கொச்சியில் உள்ள குசாட் பல்கலைக்கழகத்தில் பிரபல பாடகி நிகிதா காந்தி பங்கேற்ற இசை நிகழ்ச்சி திறந்தவெளி அரங்கத்தில் நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஏற்பட்ட நெரிசலில் 4 மாணவர்கள் பலியாகினர். பலர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த மாணவர்கள் களமச்சேரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், கூட்டம் கூட்டமாக ஆடிட்டோரியத்திற்குள் நுழைய முயன்றதால் நெரிசல் ஏற்பட்டது.

இதனால் குழப்பம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நிலைமை விரைவாக நெரிசலாக மாறியது, இதன் விளைவாக உயிரிழப்புகள் ஏற்பட்டன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலையே காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT