இந்தியா

மோடி இந்தியாவுக்கு கடவுள் கொடுத்த வரம்: முதல்வர் சௌகான்

மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜையினியில் உள்ள புகழ்பெற்ற மகாகாளேஸ்வர் கோயிலில் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தனது மனைவியுடன் வழிபாடு மேற்கொண்டார். 

DIN

மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜையினியில் உள்ள புகழ்பெற்ற மகாகாளேஸ்வர் கோயிலில் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தனது மனைவியுடன் வழிபாடு மேற்கொண்டார். 

அதோடு, சக்தி பீடங்களில் ஒன்றான ஹர்சித்தி கோயில் மற்றும் மங்கல்நாத் கோயிலிலும் முதல்வர் சௌகான் வழிபாடு செய்தார். 

கோயிலில் தலைமை பூசாரி முதல்வருக்கு சிறப்பு வரவேற்பு அளித்து வழிபாடுகளைச் செய்தனர். 

வழிபாட்டுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மோடி, 

பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கு கடவுள் கொடுத்த வரம். அவர் தலைமையில் நாடு அடைந்துள்ள முன்னேற்றம் கற்பனை செய்ய முடியாதது, ஆச்சரியமானது. 

பேரவைத் தேர்தலில் பாஜக அனைத்து மாநிலங்களிலும் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும், மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. 

காங்கிரஸ் தனது அறிவை இழந்துவிட்டது. உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததால் நாடு முழுவதும் சோகத்திலிருந்த நிலையில், காங்கிரஸ் மட்டும் மகிழ்ச்சியில் கிண்டல் செய்தனர். 

இந்த வெளிப்பாடு தேசத்துரோகத்தின் எல்லையை எட்டியுள்ளது. காங்கிரஸ் குருடாகி, ராகுல் காந்தி தேசியவாதியாகிவிட்டார்..வெட்கப்படுகிறோம் என்று முதல்வர் சௌகான் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

SCROLL FOR NEXT