இந்தியா

புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது அமேசான் இந்தியா!

DIN

அமேசான் இந்தியா நிறுவனம் இந்தியாவில் கற்றல்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ஆரோரா (Aurora) திட்டத்தைத் துவங்குயுள்ளது. 

வணிக உலகின் ஜாம்பவானாகத் திகழும் அமேசான் நிறுவனம் மும்பையில் உள்ள சோல் ஏஆர்சி (Sol ARC) எனும் இலாப நோக்கமற்ற நிறுவனத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது. மும்பை, தில்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், ஆகிய இடங்களில் உள்ள விநியோக நிலையங்களில் கற்றல்திறன் குறைபாடு உள்ள இளம் வயதினருக்காக இந்தத் திட்டத்தை செயல்படுத்தியது.

இதில் திறமையானவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவது மட்டுமின்றி பணியாளர்களின் விழிப்புணர்வை அதிகப்படுத்துவது மற்றும் கற்றல்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு ஆதரவாக இருப்பதை ஊக்குவிக்கிறது.

'கற்றல்திறன் குறைபாடு உள்ளவர்களை உள்ளடக்கிய, அனைவருக்கும் சமமான பணியிடங்களை உருவாக்குவதன் மற்றுமொரு முயற்சிதான் இந்த ஆரோரா திட்டம்' என அமேசான் இந்தியாவின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்திரமே... சித்திரமே...

இருவர் அரைசதம்: லக்னௌ அணிக்கு 209 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேபிடல்ஸ்!

சுந்தரி.. கேப்ரெல்லா!

தீராக் காதல்! ஜான்வி கபூர்..

கடைசி டி20: பாகிஸ்தானுக்கு 179 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அயர்லாந்து!

SCROLL FOR NEXT