கோப்புப்படம் 
இந்தியா

குஜராத்தில் இடி - மின்னலுக்கு 24 பேர் பலி!

குஜராத்தில் பெய்த மழையால், மின்னல் பாய்ந்து  இதுவரை 24 பேர் பலியாகியுள்ளனர்.

DIN

குஜராத்தில் பெய்த மழையால், மின்னல் பாய்ந்து  இதுவரை 24 பேர் பலியாகியுள்ளனர்; மேலும், 71 கால்நடைகள் பலியானதாக  குஜராத் அவசரகால செயல்பாட்டு மையத்தின் அதிகாரி திங்கள்கிழமை தெரிவித்தார்.

தகவலின்படி, ஆமதாபாத், அம்ரேலி, ஆனந்த், கெடா, தேவபூமி துவாரகா, பஞ்சமஹால், படான், பொடாட், மெஹ்சானா, சபர்கந்தா, சூரத் மற்றும் சுரேந்திரநகர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தபி மாவட்டத்தில் மின்னல் பாய்ந்து இருவர் பலியாகியுள்ளனர்.

பனஸ்கந்தா மற்றும் பருச் மாவட்டங்களில் மின்னல் பாய்ந்து தலா 3 பேரும், தாஹோத் மாவட்டத்தில் 4 பேரும் பலியானதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

குஜராத்தில் மின்னல் பாய்ந்து மொத்தம் 24 பேர் பலியாகியுள்ளனர், 23 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாநில அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்ததன் அடிப்படையில், காந்திநகர் மற்றும் கிர் சோம்நாத் ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் 8 மணி வரை 38 மி.மீ மழை பதிவாகியுள்ளது. ஜூனாகத்தில் 35 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அமரேலியில் 13 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT