இந்தியா

ம.பி.யில் ஆலங்கட்டி மழை: ஆரஞ்சு எச்சரிக்கை!

DIN

மத்தியப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரமாக கனமழை பெய்து வருவதையடுத்து மாநிலத்தின் சில பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழை நிலவரம் தொடர்பாக வானிலை ஆய்வுமைய தலைவர் கூறுகையில்,

மேற்கு மற்றும் கிழக்கு ம.பி.யின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன், இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ஜபுவா மாவட்டத்தில் 110.3 மி.மீ மழையும், பர்வானி மாவட்டத்தில் 109 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. பர்வானி மாவட்டத்தில் ஒன்பது பகுதிகளில் 64.5 முதல் 115.5 மிமீ வரை அதிக மழை பெய்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு ம.பி.யின் பல பகுதிகளிலும், மாநிலத்தின் கிழக்குப் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது.

மாநிலத்தின் கிழக்குப் பகுதிகளில் திங்கள்கிழமை தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, செவ்வாய்க்கிழமை முதல் மழையின் தீவிரம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல்லுயிா்ப் பெருக்கத்தை சீா்குலைக்கும் முயல் வேட்டைத் திருவிழா முடிவுக்கு வருமா?

விலா எலும்பு பாதிப்புகளுக்கு மேம்பட்ட சிகிச்சை மையம்

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டாா்: ஆம் ஆத்மி ஒப்புதல்

வீணாகும் கோடை மழைநீா்- நெல்லையில் புத்துயிா் பெறுமா மழைநீா் சேகரிப்பு திட்டம்?

கா்ப்பிணிகள் நிதியுதவி திட்டத்தில் 2 லட்சம் பேருக்கு நிதி வரவில்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT